தமிழ்நாடு

”இதுதாங்க மக்களோட முதல்வர்; மக்களின் முதல்வர்” - சென்னை மென்பொறியாளரின் நெகிழ்ச்சி பதிவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைவிடாத பணியால் மென்பொறியாளர் ஒருவர் பூரித்துப்போய் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

”இதுதாங்க மக்களோட முதல்வர்; மக்களின் முதல்வர்” - சென்னை மென்பொறியாளரின் நெகிழ்ச்சி பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிவரும் இடைவிடாத பணிகள் குறித்து, அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரின் ஆர்வம் மிக்க பதிவு ஒன்று `வாட்ஸ் அப்’பில் வைரலாகி வருகின்றது.

வீடியோ பதிவில் அவர் கூறியதாவது:-

என் பெயர் பிரகாஷ், நான் சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் ஆப்ஷன் இருப்பதனால் நான் தற்போது எனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். நான் கடந்த இரண்டு வாரமாக இங்கே (தஞ்சாவூரில்) இருந்துதான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த சமயத்தில், நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கான மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதற்காக இங்கே வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சி என் வீட்டு அருகில்தான் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் அறிவிக்கிற எல்லா விஷயங்களும் ஓரளவுக்கு எங்கள் வீட்டிற்கு கேட்டது. பணியின் பிரேக் டைமில் நான் செய்தியும் பார்த்தேன். நியூசிலும் அதே அறிவிப்புகளை என்னால் பார்க்க முடிந்தது. இந்தச் சம்பவங்கள் நேற்று காலையில் நடைபெற்றபோது மதியம் அவர் திருச்சியை நோக்கி பயணித்தார். திருச்சியில் பார்த்தீர்கள் என்றால் அங்கேயும் இதே மாதிரியான நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக போய் இருந்தார்.

அந்தச் சமயத்தில் சென்னையில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு, சென்னையில் கனமழை, எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கிவிட்டது. ட்ராபிக்ல ஆம்புலன்ஸ் கூட போக முடியவில்லை. அந்த அளவிற்கு சென்னையில் ட்ராபிக் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அப்போது நான் நினைத்தேன், முதல்வர் திருச்சியில் இருக்கிறார். திருச்சியில் இருந்து அவர் டைரக்ட் செய்வார். ஆலோசனை சொல்வார் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

அன்று இரவு நான் மீண்டும் செய்தியை பார்க்கும்போது முதல்வர் அவர்கள் சென்னைக்கு வந்து இன்ஸ்பெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கிறார் என்று பார்த்தேன். அப்போது டைம் இரவு 12 மணி. காலையில் தஞ்சாவூரில் இருக்கிறார். மதியம் திருச்சியில் இருக்கிறார். திரும்ப இரவில் சென்னையில் ஆய்வு செய்துக்கிட்டு இருக்கிறார். இதுதாங்க, மக்களோட முதல்வர், மக்களின் முதல்வர்!

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், நான் திராவிடக் கட்சி கிடையாது. எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. நான் பொதுமக்கள் பார்வையில் இருந்து என்னால் சொல்ல முடியும். இவர் மக்களுடைய முதல்வர், இவர்தான் மக்களின் முதல்வர் என்கிற அந்த "பீல்’’ என்னால் பண்ண முடிகின்றது. அவர் நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இதேபோன்று மக்கள் பணியில் ஈடுபட்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories