தமிழ்நாடு

“13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை” : மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருப்பூரில் ஏழாவது பயிலும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை” : மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூரில் ஏழாவது பயிலும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குமாரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(50) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் 7ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நடந்தது பற்றி சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி சுகந்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளி செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories