இந்தியா

“சொகுசு வாழ்க்கை.. கோழிக்குஞ்சு விற்பனையில் ₹5 கோடி கையாடல்” : கேரள தம்பதியர் பகீர் மோசடி - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோழிக்குஞ்சு விற்பனையில் ரூ.5.64 கோடி மோசடி செய்த கேரள தம்பதியரை போலிஸார் தேடி வருகின்றனர்.

“சொகுசு வாழ்க்கை.. கோழிக்குஞ்சு விற்பனையில் ₹5 கோடி கையாடல்” : கேரள தம்பதியர் பகீர் மோசடி - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டம் ஆனைமலை செம்மணாம்பதி பகுதியில் (எம்.எஸ்.என். ஹேட்செரீஸ்) தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் கோழி குஞ்சு பொரித்து விற்பதுடன், அவற்றுக்கான தீவனமும் தயார் செய்து வருகின்றது. தாய் கோழிகளை வாங்குதல், குஞ்சுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தல், தீவனத்திற்கு மூலப் பொருட்களை வாங்குதல், தீவனம் தயாரித்து விற்பனை செய்தல் போன்ற பணிகளை இந்நிறுவனம் செய்து வருகின்றது.

இப்பணிகளை கவனிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு மண்டல மேலாளராக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் அனுமதிக்கப்பட்டார். இவரது மனைவி பிரமிளா இதே நிறுவனத்தில் உதவி அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகள் நிறுவனம் வளாகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இதே நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த தம்பதியிடம் பெரிய அளவில் பணம் புரள்வதாகவும் அவர்கள் அதிகமான சொத்துக்கள் வாங்குவதாகவும் நிறுவனத்திற்கு தெரியவந்தது. சந்தேகம் கொண்ட நிறுவனத்தினர், நிறுவன கணக்கை சரிபார்த்தனர்.

அப்போது, பிரதீப்குமார் அவரது மனைவியும் சேர்ந்து விற்பனைகளை குறைத்துக் காட்டி பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 5.64 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட கேரள தம்பதியும் தலைமறைவாகினர். இதையடுத்து நிறுவன பொது மேலாளர் சிபில் அல்பேட்டா கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர் பிரதீப்குமார் அவரது மனைவி பிரேமலதாவையும் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories