தமிழ்நாடு

“இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை”: போலிஸில் சிக்கிய தொழிலதிபர் - பின்னணி என்ன?

இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை”: போலிஸில் சிக்கிய தொழிலதிபர் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் பிஜாய் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் சமீபத்தில் சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றுக்கு வெளியிட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “எனது மகள் கடந்த 4 ஆண்டுகளாக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளார். எனது மகளுக்கு சூரத்கல் போலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டிப்பள்ளா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் முகமது ஷெரீப் (வயது 47) என்பவர் போதைப்பொருள் வாங்கி கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளார். மேலும் போதைப்பொருள் கொடுத்து எனது மகளை அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி உருவா போலிஸில் புகார் கொடுத்தேன். ஆனால் போலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உங்கள் அமைப்பு மூலம் போதையின் பிடியில் சிக்கியுள்ள மகளை மீட்கவும், அவளை போதைக்கு தள்ளிய முகமது ஷெரீப் மற்றும் அவரது நண்பர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி முகமது ஷெரீப்பை கைது செய்யும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் மங்களூரு மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமாரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சூரத்கல் போலிஸாருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சூரத்கல் போலிஸார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரீப்பை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும், அதில், ஒரு மனைவி கோவாவிலும், மற்றொருவர் மராட்டியத்திலும், இன்னொரு மனைவி மங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில் முகமது ஷெரீப், அந்த பெண்ணின் மகளை தான் போதைக்கு அடிமையாக்கி முகமது ஷெரீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், மேலும் அந்த பெண்ணுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

கைதான குற்றவாளியிடம் போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories