தமிழ்நாடு

“இந்திய அளவில் யாருக்கு பாடம்புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்ட தயாராவோம்”:முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பா.ஜ.க -அ.தி.மு.கவுக்கு பாடம் புகட்டவேண்டும் எனக் கூறினேன். தமிழக மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அதேபோல, இந்திய அளவில் பாடம் புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

<div class="paragraphs"><p>file image</p></div>
<div class="paragraphs"><p>file image</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப் படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தா.பாண்டியன் உருவப் படம் திறக்கப்பட்டது. மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்று மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

“இந்திய அளவில் யாருக்கு பாடம்புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்ட தயாராவோம்”:முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தோழர் தா.பாண்டியன் என்றாலே தலை தாளாத பாண்டியன் என்றுதான் பொருள்; எப்போதும் யாருக்கும் அஞ்சாத நபராக மட்டுமே அவர் இருந்தார்.

திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் எப்போதும் கூறுவார்; அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம். நம்மிடையே இருக்குறது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உறவு.

ஜோசப் ஸ்டாலின் இல்லையென்றால் எப்படி சோவியத் இல்லையோ அதுபோல இந்த ஸ்டாலின் இல்லாமல் எந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும் இருக்காது.

பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் பாடம் புகட்டக்கூடிய தேர்தலாக இருக்கும் என கூறினேன்; தமிழக மக்கள் பாடத்தைப் புகட்டிவிட்டனர். இந்திய அளவில் யாருக்கு பாடம் புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு பாடம் புகட்ட அனைவரும் உறுதியேற்க வேண்டும்.” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories