தமிழ்நாடு

சிறுநீரக பாதிப்பால் மகன் தற்கொலை.. துக்கம் தாளாமல் விபரீத முடிவு எடுத்த தாய்: சோகத்தில் மூழ்கிய மக்கள் !

மகன் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல் தாயும் தற்கொலை செய்துகொண்டது கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக பாதிப்பால் மகன் தற்கொலை.. துக்கம் தாளாமல் விபரீத முடிவு எடுத்த தாய்: சோகத்தில் மூழ்கிய மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், காரக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இளைஞரான இவருக்குச் சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து, தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து மகனுக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காகச் சிகிச்சை ஏற்பாட்டையும் செய்து வந்துள்ளனர்.

அப்போது, திடீரென இளைஞர் பிரேம்குமாருக்கு காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தள்ளிப்போனது. இதனால் பிரேம்குமார் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரேம்குமால் சனிக்கிழமை இரவு விஷமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகன் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தாயார் கஸ்தூரியும் தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories