தமிழ்நாடு

ஒருவாரம் தண்ணீர் பேரலில் கிடந்த கணவன் சடலம்.. துர்நாற்றம் வீசியதால் சிக்கிய மனைவி : நடந்தது என்ன?

குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவனை அடித்து கொலை செய்த மனைவியை போலிஸார் கைது செய்தனர்.

ஒருவாரம் தண்ணீர் பேரலில்  கிடந்த கணவன் சடலம்.. துர்நாற்றம் வீசியதால் சிக்கிய மனைவி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி பிரியா. சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தரகாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அடிக்கடி சேதுபதி வீட்டிற்கு வந்துசெல்வார். இதனால் பிரியாவுக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது.

இதையடுத்து குடித்துவிட்டு கொடுமைப் படுத்தும் கணவனைப் பிரிந்து வந்துவிட்டால் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக பிரியாவிடம், சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு அடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ்குமார் இவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது பிரியாவும், சதீஷ்குமாரும் சேர்ந்து கல்லால் அடித்து சேதுபதியை கொலை செய்துள்ளனர்.

பின்னர், அவரின் சடலத்தைத் தண்ணீர் பேரலில் போட்டு மூடிவைத்துள்ளனர். ஒருவாரத்திற்கு மேல் தண்ணீர் பேரலில் சடலம் இருந்ததால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சேதுபதியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்துச் சென்று புதைத்துவிடலாம் என நினைத்து வீட்டிலிருந்த தண்ணீர் பேரலை இருவரும் சேர்ந்து வெளியே எடுத்து வந்தனர்.

ஒருவாரம் தண்ணீர் பேரலில்  கிடந்த கணவன் சடலம்.. துர்நாற்றம் வீசியதால் சிக்கிய மனைவி : நடந்தது என்ன?

அப்போது, பேரலிலிருந்து துர்நாற்றம் வீசியது குறித்து பொதுமக்கள் பிரியாவிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர், அங்கு வந்த போலிஸார் இவருவரிடம் விசாரணை செய்தபோது கணவனைக் கொலை செய்து தண்ணீர் பேரலில் ஒருவாரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவனை கொலை செய்த மனைவி பிரியா, பக்கத்து வீட்டுக்கார் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories