தமிழ்நாடு

“நான் லஞ்சம் பெறுவதில்லை” : காவல் நிலையத்தில் எச்சரிக்கை பேனர் வைத்த ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!

"லஞ்சம் கொடுக்க வேண்டாம்" என காவல் ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப் பலகை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“நான் லஞ்சம் பெறுவதில்லை” : காவல் நிலையத்தில் எச்சரிக்கை பேனர் வைத்த ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாநகர சைபர் கிரைம் பிரிவில் சரவணன் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சரவணன் கடந்த 25ம் தேதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் காவல் நிலையத்தில் “லஞ்சம் கொடுக்க வேண்டாம்” என ஆய்வாளர் சரவணன் வைத்துள்ள விளம்பரப் பலகை அப்பகுதி மக்கள் வரவேற்பே பெற்றுள்ளது. அந்த விளம்பரப் பலகையில், “ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல்துறை ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ள சரவணன் ஆகிய நான், யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை.

“நான் லஞ்சம் பெறுவதில்லை” : காவல் நிலையத்தில் எச்சரிக்கை பேனர் வைத்த ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!

என் பெயரைச் சொல்லிக் கொண்டு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரைச் சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி யாரிடமும் எந்த வித பொருளோ, பணமோ கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் ஆய்வாளரின் இந்த விளம்பரப் பலகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆய்வாளரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories