தமிழ்நாடு

”பொதுத்தேர்வு நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும் தகவல் என்ன?

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

”பொதுத்தேர்வு நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும் தகவல் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசு பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி என 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேடைப்பேச்சு:-

பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார் ஒரு மெழுகுவர்த்தியை 100 மெழுகுவர்த்தியை ஏற்றி விடலாம். அதுபோல் ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பத்தையே படிக்க வைத்து விடலாம் என கூறினார்.

மேலும் பெண்களின் கல்வி மறுக்கப்படுவதால் 30 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றது. சமுதாயம் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு பெண்கள்தான் காரணம். தமிழகத்தில் 70% பெண்கள் எழுத்தறிவோடு நடைபோடுவதற்கு காரணம் நம் முன்னோர்கள் பெண்கள் கண்டிப்பாக படிக்க கேண்டும் என கூறியவர் தந்தை பெரியார் என மாணவர்களிடையே உரையாற்றினார்.

கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைப்பதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காக என மாணவர்கள் உணர வேண்டும் என உரையாற்றினார்.

”பொதுத்தேர்வு நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும் தகவல் என்ன?

செய்தியாளர் சந்திப்பு:-

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க முன்வர வேண்டும். பள்ளிகளில் கண் பார்வைக் குறைபாடு உடல் ரீதியான பிரச்சினைகளுக்குதான் தற்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக மருத்துவர்களாக எப்படி மாற்றலாம் என ஆலோசித்து வருகிறோம் அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.

குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நல்ல ஆசிரியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளில் புகார் பலகைகள் மற்றும் வகுப்பறைகளில் 14417 மற்றும் 1098 எண் கொண்ட பதாகைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என பேசினார்.

மாணவர்கள் ஆசிரியர்கள் மோதலை எப்படி கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்

கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும்.பாடத்திட்டம் மற்றும் சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம். பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தவிர்க்க ஆசிரியர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

banner

Related Stories

Related Stories