தமிழ்நாடு

ஆண் தேவதைகள்.. கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: குவியும் பாராட்டு!

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர்.

ஆண் தேவதைகள்.. கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.உடனே அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அந்தப் பெண் வலிதாங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் மற்றும் ஓட்டுநர் சிவகுமார் ஆகியோர் இருவரும் அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், குழந்தையையும் அந்த பெண்ணையும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகக் கூறினர்.

மேலும், நேரத்தைக் கடத்தாமல் உடனே பிரசவம் பார்த்த இருவருக்கும் மருத்துவர்கள் பாராட்டினர். இதையடுத்து பொதுமக்களும் ஆண் தேவதைகள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories