
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான
212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திண்டுக்கல் மாநகராட்சியில் 132 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறுசீரமைப்புப் பணிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் 8 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் செலவில் சத்யா நகர் பகுதியில் சமுதாயக் கூடம், தென்றல் நகர், கைராசி நகர் ஆகிய இடங்களில் பூங்காக்கள், ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம், கொடைக்கானல், கே.ஆர்.ஆர். கலையரங்க வளாகத்தில் 2 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் அறிவியல் பூங்கா;
திண்டுக்கல் – நேருஜி மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு தொகுதிக் கட்டடங்கள் மற்றும் கவடக்காரத் தெரு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம், பழனி - கடைவீதி நடுநிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 1 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் இராஜாஜி சாலை, சத்யா நகர் பகுதியில் மேம்படுத்தப்பட்ட இராசகோபால் பூங்கா;
சின்னாளபட்டி, பாளையம், சித்தையன்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பேரூராட்சிகளில் 23 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, தினசரி சந்தை;
கூட்டுறவுத் துறை சார்பில், ஆத்தூரில் 75 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையக் கட்டிடங்கள், நியாயவிலைக் கடைகள், பாலங்கள், உணவு தானியக் கிடங்குகள், பயணியர் நிழற்குடைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்திற்கான 3 தொகுதிக் கட்டிடத்திற்கு மேற்கூரைகள், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானம், கால்பந்து மைதானம், ஓட்டப்பந்தயம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் கால்பந்து மைதானத்திற்கான படுக்கை வசதிகள், சமத்துவபுர வீடுகள், குளியலறைகள், நுழைவுவாயில், உணவு அருந்தும் கூடம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், சமுதாய சுகாதார வளாகங்கள், சமையலறைக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு முடிவுற்றப் பணிகள் என 41 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 70 மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டப் பணிகள்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கோசுக்குறிச்சி, பெரியூர்பட்டி, குடகிபட்டி, செங்குறிச்சி, அஞ்சுகுழிப்பட்டி, வேம்பார்பட்டி, வேடசந்தூர், தங்கம்மாபட்டி, மேல்கரைப்பட்டி, வத்திப்பட்டி, தொட்டனம்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 17 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்;
உயர்க் கல்வித் துறை சார்பில், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கல்லூரிக் கட்டடம்;
நீர்வளத் துறை சார்பில், பெரிச்சிபாளையம் கிராமம் - சண்முகநதி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை;
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் 6 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டடம்;
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், திண்டுக்கல், தோட்டனூத்து ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 21 இலட்சம் ரூபாய் செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தொழிற்கூடம்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கன்னிவாடி, குஜிலியம்பாறை, பூலத்தூர், பெரும்பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் துணை சுகாதார நிலையங்கள், வேடசந்தூர் - வடமதுரையில் பிலாத்து மலைவாழ் மக்களுக்கு பிரசவம் மற்றும் மகப்பேறு மருத்துவப் பயனாளிகளுக்கு 25 இலட்சம் ரூபாய் செலவில் மருத்துவக் கட்டடம்;
வனத் துறை சார்பில், 1 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் சிறுமலை பல்லுயிர் பூங்கா, திண்டுக்கல் வனப்பாதுகாவலர் குடியிருப்பு;
என மொத்தம், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், பழனி அடிவாரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான புதிய ஓய்வு மண்டபம்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 11 சமுதாய கழிப்பிடங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி - காந்தி மார்க்கெட் வளாகத்தில் 3 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கும் பணிகள்;
கொடைக்கானல் நகராட்சி - கே.ஆர்.ஆர்.கலையரங்க வளாகத்தில் 34 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்;
எரிசக்தித் துறை சார்பில், பண்ணைக்காடு, கொடைக்கானல் மற்றும் நத்தம் ஆகிய இடங்களில் 64 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள்;
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், ஒட்டன்சத்திரம் - கேதையுறும்பு கிராமத்தில் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேமிப்புக் கிடங்கு;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 49 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள், சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பாலங்கள், பயணியர் நிழற்குடைகள், சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் விரிவாக்கப் பணிகள், வாய்க்கால் அமைக்கும் பணிகள், கதிரடிக்கும் தளங்கள், காத்திருப்புக் கூடம் மற்றும் எரிமேடைகள், மலக்கசடு மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம், விளையாட்டு காட்சியகம் மற்றும் காத்திருப்போர் அறை உள்ளிட்ட 173 ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், கீரனூர், கப்பல்பட்டி, அம்பிளிக்கை, வெரியப்பூர், கொழுமம்கொண்டான், காவேரியம்மாபட்டி, கொத்தையம், சிந்தலப்பட்டி, வடகாடு, ஏரமநாயக்கன்பட்டி, வாகரை, முத்துநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 6 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கக் கட்டடங்கள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பெருமாள்மலை, பூம்பாறை, பூலத்தூர், பெரும்பள்ளம், கூத்தம்பூண்டி, தங்கச்சியம்மாபட்டி, கொத்தையம், கரியாம்பட்டி ஆகிய இடங்களில் 6 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள்;
என மொத்தம், 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

கலைஞர் கைவினைத் திட்டம் - மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்வில், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 37 கைவினைக் கலைஞர்களுக்கு பூட்டு தயாரித்தல், பாரம்பரிய இசைக் கருவிகள் தயாரித்தல், பாசிமணி வேலைப்பாடுகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மலர் வேலைப்பாடுகள், கண்ணாடி வேலைப்பாடுகள், தையல் வேலை, சிகையலங்காரம் போன்ற பல்வேறு கைவினைத் தொழில்களை மேற்கொள்ள 66.35 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 13.10 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், 1,02,550 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 1898 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் மற்றும் 509 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 1,01,090 பயனாளிகளுக்கு ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், பெரியார் நினைவு சமத்துவபுரம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், வங்கி கடன் இணைப்பு, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை மற்றும் நுண்நிறுவன நிதி கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 25,000 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஊட்டச்சத்து பெட்டகம், வளரிளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற பல்வேறு உதவிகள்;
கூட்டுறவுத் துறை சார்பில், 5,068 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன், பயிர்க் கடன், மத்திய கால விவசாயக் கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில், 3,037 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்;
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 6,949 பயனாளிகளுக்கு ஆட்டோ மானியம், இயற்கை மரண உதவித் தொகை,
இ-ஸ்கூட்டர், ஓய்வூதியம், கண்கண்ணாடி, கல்வி, திருமணம் ஆகியவற்றிற்கான மானியம், தீவிர நோய்க்கான சிகிச்சை உதவித்தொகை, வீட்டுவசதித் திட்டம், விபத்து மரண உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 6,870 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், வேளாண்மை இயந்திர மயமாக்கலின் துணை இயக்கம், சூரிய கூடார உலர்த்தி திட்டம், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட், சூரிய மின்வேலி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தனிப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஆழ்துளை குழாய் கிணறுகள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 5,205 பயனாளிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்துடன் மின்சார புல் நறுக்கும் கருவி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை, மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு உள்ளீட்டு மானியம், மானிய விலையில் மீன்பிடி பரிசல், மானிய விலையில் வலை, புதிய மீன்வளர்ப்பு குளம், புறக்கடை அலங்கார மீன்வளர்ப்பு செய்தல், பயோபிளாக் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்த்தல் திட்டம், அலங்கார மீன்வளர்ப்பு கடை அமைத்தல், மீனவர் நலவாரிய அடையாள அட்டைகள் போன்ற பல்வேறு உதவிகள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 1,757 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு வசதிகள், சொத்துவரி, வீட்டுவரி, சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள்;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1,000 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள்;
கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில், 428 பயனாளிகளுக்கு கைத்தறி ஆதரவு திட்டம், முத்ரா கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 626 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
பிற்படுத்தபட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 215 பயனாளிகளுக்கு கிறித்தவர்களுக்கான கல்லறைத்தோட்டத்திற்கு சுற்றுசுவர் அமைத்தல் / புனரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி திட்டம், தேய்ப்புப் பெட்டிகள், தையல் இயந்திரம், தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகளுக்கான அரசின் நிதி உதவி திட்டம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 157 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி, பழங்குடியினர் நல வாரிய அட்டைகள், புதிரை வண்ணார் நல வாரிய அட்டைகள் போன்ற பல்வேறு உதவிகள்;
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 150 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
கலை பண்பாட்டுத் துறை சார்பில், 96 நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள்; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 100 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,62,864 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 38 புதிய நகரப் பேருந்துகள் மற்றும் 23 புதிய புறநகர் பேருந்துகள், என மொத்தம் 61 புதிய பேருந்துகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.








