தமிழ்நாடு

"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜ.பெரியசாமி," மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலியல் கொடுமைகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகள் என்ன கோரிக்கை வைக்கிறோர்களோ அந்தக் கோரிக்கையைக் கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு ஏற்று அவர்களுக்கு உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories