தமிழ்நாடு

கனமழை.. இதுதான் உகந்த நேரம் - ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கஞ்சா கடத்திய கும்பல்!

கனமழையைப் பயன்படுத்தி ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கஞ்சா கடத்திய கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

கனமழை.. இதுதான் உகந்த நேரம் -  ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கஞ்சா கடத்திய கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெரிய பார்சல் மூட்டைகள் இருந்தை பார்த்த அதிகாரிகள் சந்தேகத்துடன் ஆய்வு செய்தனர். அதில் கஞ்சா இருந்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.இதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி ஈரோட்டில் விற்பனை செய்யச் சென்றபோது பிடிபட்டுக் கொண்டது தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ததால் இந்த நேரத்தைப் பயன்படுத்தி கஞ்சாவை கடத்தி சென்றால் யாரிடமும் மாட்டிக் கொள்ள மாட்டோம் என நினைத்து கஞ்சாவை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் பிடிபட்ட அந்த இரண்டு நபர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories