தமிழ்நாடு

“10ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர்” : போக்சோ சட்டத்தில் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியரை போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

“10ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர்” : போக்சோ சட்டத்தில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் பகுதியில் உள்ள பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 43).

இவர் 10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். ஆனால் சீனிவாசன் திருமணம் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான அந்த மாணவி இது குறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் கோவில்பட்டி துணை போலிஸ் சூப்பிரண்டு உதயசூரியன் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார், பஞ்சாயத்து ஊழியர் சீனிவாசனை கைது செய்தனர்.

பின்னர் அவரை அனைத்து மகளிர் போலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலிஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories