தமிழ்நாடு

“ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு தகுந்த உதாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘தினகரன்’ நாளேடு!

பேரிடர் காலத்தில் ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு தகுந்த உதாரணமாகத் திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

“ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு தகுந்த உதாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘தினகரன்’ நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2015ம் ஆண்டுக்குப்பிறகு பெய்த மிக கனமழை, சென்னையை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க வைத்திருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மழை வெள்ளத்தில் சென்னை தத்தளித்த போது, நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை. ஆனால் தற்போது பொறுப் பேற்றுள்ள தி.மு.க அரசு மீட்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறது. பேரிடர் காலத்தில் ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு தகுந்த உதாரணமாகத் திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என ‘தினகரன்’ நாளேடு 12.11.2021 தேதியிட்ட இதழில் ‘விரைவில் மீள்வோம்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளி யிட்டுள்ளது!

அது பற்றிய விவரம் வருமாறு:

2015 ம் ஆண்டுக்கு பிறகு பெய்த மிக கனமழை, சென்னையை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க வைத்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மழை வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது, நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெறவில்லை. விளைவு... மக்கள் உணவு, இருப்பிட வசதி மற்றும் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, மீட்பு நடவடிக்கைகளில் கடும் வேகம் காட்டி வருகிறது. உத்தரவு போடும் முதல்வராக இல்லாமல், உதவி வேண்டுவோருக்கு முன்வந்து நிற்கும், முன்னுதாரண முதல்வராக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்.

ஆபத்தின் வண்ணம் என்றாலும் கூட, ஆபத்தில் இருந்து காக்கும் வண்ணமாக மாறியிருக்கிறது சிவப்பு. ஆம்... அந்த சிவப்பு ஜீப்பில், வெள்ளம் சூழ்ந்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக ஓய்வின்றி கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று வருகிறார். நிவாரணப்பணிகளை முடுக்கி விடுவதோடு, மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருவது தமிழக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உலக வங்கி நிதியின் கீழ், 2015 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் ஆயிரம் கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் ரூ.3,220 கோடி பெறப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், மழைநீர் வடிகால்வாயை தரமின்றி அமைத்ததால், சாலை மற்றும் குடியிருப்பில் தண்ணீர் மீண்டும் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்தும் சென்னை மற்றும் புறநகர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட தி.நகரும் வெள்ளத்தில் மிதப்பதற்கு, முந்தைய ஆட்சியாளர்களும், அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளும்தான் உரிய பதிலளிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய வெள்ளத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கின்றனர். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. மழைக்காலம் முடிந்தவுடன் சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்’’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என சென்னை மக்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருபுறம் ‘‘போட் ஷூட்டிங்’’ நடத்தி, ‘‘காமெடி டிராமா’’ அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்தது, துரித நேரத்தில் மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியது, நிவாரண முகாம்களில் தங்க வைத்தது, ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற வைத்தது என பேரிடர் காலத்தில் ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டுமென்பதற்கு தகுந்த உதாரணமாக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின். இதன்மூலம் பாதிப்பிலிருந்து விரைவில் மீள்வோமென்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் பிறந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories