தமிழ்நாடு

“மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு” : வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் !

ன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/.லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.

“மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு” : வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/.லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

தமிழ்நாடு அரசு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/- வீதம் வழங்கி வருகின்றது. மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.5000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில் நடப்பு ஆண்டிலிருந்து (2021-22) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு ரூ.5000/.லிருந்து ரூ.6000/. ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6000/.வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் 74.40 கோடிரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.10 இலட்சம் மீனவர்களுக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1,500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3000/. என்ற வகையில் மொத்தம் ரூ.4,500/- வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென அரசின் பங்குத் தொகையாக ரூ.63.19 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களிலுள்ள 1.48 இலட்சம் கடல் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.09 இலட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்’குத் தொகை ரூ.1500/- உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3000/- வீதம் மொத்தம் ரூ.4500/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதற்கொன அரசின் பங்குத் தொகையாக ரூ.62.80 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளுர் முதல் இராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.46 இலட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை ஆகிய மாவட்டங்களில் மீகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலின்பிடி குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories