
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலி. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் SBI வங்கி நடத்திய தேர்வில் பங்கேற்றுள்ளார். இதன் தேர்வு முடிவுகள் வெளியானது. இதை வீட்டில் இருந்து தனது தேர்வு முடிவை கமலி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தேர்வில் வெற்றி பெற்றதை கண்டு, தனது பெற்றோர்களை கட்டி அனைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன் வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் கமலிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், SBI வங்கிப் பணியாளராக தேர்ச்சி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலியின் வெற்றி கொண்டாட்ட வீடியோவை பகிரிந்து, ”நானே ஜெயித்ததுபோல இருக்கிறது” சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.






