மு.க.ஸ்டாலின்

“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!

வட மாநிலங்களில் கிறிஸ்தவர்களை இந்துத்வ கும்பல் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை இந்துத்துவ கும்பல் தடுத்து நிறுத்தியதோடு பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முன்னரே மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தது இந்துத்துவ கும்பல் மற்றும் பாஜக. பாபர் மசூதி இடிப்பு முதல் மணிப்பூர் கலவரம் வரை வெறுப்பின் உச்சம் என்றே சொல்லலாம். இஸ்லாமிய பெண்கள் மீதான வன்முறை, ஆண்கள் மீதான தாக்குதல் இப்படி தொடர்ந்து பாஜக செய்து வந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்தே காணப்படுகிறது.

முதலில் இஸ்லாமியர்களை முழுமையாக குறிவைத்துள்ள இந்துத்துவ கும்பல், தற்போது கிறிஸ்துவர்களையும் வெளிப்படையாகவே தாக்க தொடங்கியுள்ளது. கிறிஸ்துவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்துத்துவ கும்பல் தற்போது தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!

அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பொருட்களை பலரும் சாலையில் நின்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களை இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று இந்துத்துவ கும்பல் அவர்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பியது.

அந்த வகையில் பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள மெக்னடோ மாலில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்துத்துவ கும்பல் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களையும் சரமாரியாக உடைத்து சேதப்படுத்தி, இந்துத்துவ கும்பலின் கோஷத்தை எழுப்பினர்.

“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!

அதுமட்டுமின்றி பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் நுழைந்து, கிறிஸ்துமஸ் விழாவிற்கு உபயோகித்த பொருட்களை பஜ்ரங் தள் குண்டர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். அதோடு உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இப்படி இந்துத்துவ கும்பல், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்துத்துவ கும்பலின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

banner

Related Stories

Related Stories