தமிழ்நாடு

சிறுநீர் கழித்த இளைஞர் கழுத்து நெரித்து கொலை.. தாய், மகனை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?

சிறுநீர் கழித்த இளைஞரை கொலை செய்த இருவரை போலிஸார் கைது செய்தனர்.

சிறுநீர் கழித்த இளைஞர்  கழுத்து நெரித்து கொலை.. தாய், மகனை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே சுப்பிரமணி என்பவர் வளையல் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகே சந்தோஷ் கதிர்வேல் என்பவரும் கடைநடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வியாபாரம் முடித்து விட்டு சுப்பிரமணி கடையை மூடிவிட்டுப் புறப்பட்டுள்ளார். அப்போது சுப்பிரமணி சந்தோஷ் கதிர்வேலின் கடைக்கு முன்பாக சிறுநீர் கழித்துள்ளார்.

இதைப் பார்த்த சந்தோஷ் மற்றும் அவரது தாய் சுகுணா ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயும், மகனும் சேர்ந்து சுப்பிரமணியைத் தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

சிறுநீர் கழித்த இளைஞர்  கழுத்து நெரித்து கொலை.. தாய், மகனை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?

பிறகு இவர்களிடம் இருந்து தப்பிய சுப்பிரமணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் போலிஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலிஸார் சுப்பிரமணியைத் தாக்கிய சந்தோஷ் மற்றும் அரவது தாய் சுகுணா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுநீர் கழித்தற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories