தமிழ்நாடு

விடுதியில் அடைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் உட்பட 4 பேர் கைது: அதிர்ச்சி சம்பவம்!

சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.

விடுதியில் அடைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் உட்பட 4 பேர் கைது: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஜே.ஜே. நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளைக் காணவில்லை என கடந்த 27ம் தேதி திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து அடுத்தநாள் காணாமல் போன சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று தனியார் விடுதி ஒன்றில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்படி போலிஸார் விசாரணை நடத்தியதில், பாடி பகுதியைச் சேர்ந்த ஏழுமைலை என்ற இளைஞர் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல், அரவது நண்பர்களான ராமு, பாலசந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோரை விடுதிக்கு வரவழைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தில் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories