தமிழ்நாடு

நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி MP.. பல்வேறு துறை குழுக்களில் தி.மு.க எம்.பிக்கள் நியமனம் - பட்டியல் இதோ!

நாடாளுமன்றகுழு தலைவராக தி.மு.க நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி MP.. பல்வேறு துறை குழுக்களில் தி.மு.க எம்.பிக்கள் நியமனம் - பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற குழுக்களை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி.க்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, ரயில்வே துறையின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக டி.ஆர்.பாலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உரம், வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக தி.மு.க மக்களவை துணை தலைவர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அதன் உறுப்பினராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை உறுப்பினராக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சுகாதாரத்துறை உறுப்பினராக மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி சோமு, மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோரும் சட்டத்துறை உறுப்பினர்களாக ஆ.ராசா, பி.வில்சன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், வனத்துறை உறுப்பினராக எஸ். ஜெகத்ரட்சகனும், போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார துறை குழுவின் உறுப்பினராக திருச்சி சிவா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உரம், எஃகு துறை உறுப்பினராக எஸ்.ஆர்.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறைக்கான உறுப்பினராக என்.ஆர்.இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி துறைக்கான உறுப்பினராக டி.கே.எஸ் இளங்கோவன், பி.வேலுச்சாமி, ஞானதிரவியம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உணவுத்துறைக்கு பி.செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கு எம்.சண்முகம், பெட்ரோலிய துறைக்கு கலாநிதி வீராசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories