தமிழ்நாடு

“30,000 முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு”: 5-வது கட்ட தடுப்பூசி முகாம் தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 5ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்தி கொள்கின்றனர்.

“30,000 முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு”: 5-வது கட்ட தடுப்பூசி முகாம் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 20ஆம் தேதி முதல் முறையாக மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட நிலையில், இன்று 5வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் ஐந்தாவது கட்டமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பொருத்தவரை 30 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டடிருக்கின்றன. சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 1,600 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என ஒரு மண்டலத்திற்கு 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் மொத்தம் 1,600 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

இதுதவிர முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இல்லத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசியை பொருத்தவரை 18 வயதிற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் இந்த முறை எடுத்துக் கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories