தமிழ்நாடு

”கைகொடுக்கும் தடுப்பூசி முகாம்.. இதுவரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” : ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில்18 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மாநில சராசரி எண்ணிக்கையை விட குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

”கைகொடுக்கும் தடுப்பூசி முகாம்.. இதுவரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” : ராதாகிருஷ்ணன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாமினை முன்னிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது, அவருடன் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “இதுவரை இல்லாத வகையில் 32,017 இடங்களில் இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றது. இதுவரை மொத்தமாக, 5.03 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மூலம் 4.78 கோடி டோஸ் தடுப்பூசியும், தனியார் மூலம் 25.70 லட்சம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதில், 3.74 கோடி டோஸ் முதல் தவனை தடுப்பூசியும், 1.29 கோடி டோஸ் இரண்டாம் தவனை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையிடம் 46.08 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்று மதியம் மேலும் 6லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரவுள்ளது. தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதனால், 2வது தவனை செலுத்த வேண்டிய காலம் கடந்தும் கோவிஷீல்டு 2வது தவனை தடுப்பூசி செலுத்தாமல் 20 லட்சம் பேரும், 6.85 லட்சம் பேர் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று போலியோ நோய் போன்று ஒழிக்கப்பட்ட நோய் அல்ல, இதனால் கொரோனா தொற்றை தடுக்கும் வழிமுறைகளை மக்கள் பின்பற்றி, தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

”கைகொடுக்கும் தடுப்பூசி முகாம்.. இதுவரை 5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” : ராதாகிருஷ்ணன் பேட்டி!

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உயிரிழந்தவர்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். உயிரிழந்தவர்களில் 4%பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களும் வேறு இணை நோய்களினால் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு மாவட்டங்களில் நொற்று குறைந்துள்ளது. 18 மாவட்டங்களிங் மாநில சராசரி எண்ணிக்கையான 1.1 என்ற விகிதத்திலிருந்து குறைந்துள்ளது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

125 நாட்களில் டெங்கு நோய் உள்ளது. குறிப்பாக, வரும் 3 மாதங்களில் டெங்கு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். மக்கள் தங்களது இல்லங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். 375 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டந்தோறும் தினமும் உறுதி செய்யப்படுகிறது. இதனால், சேலம், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகளில் பூச்சியியல் வள்ளுநர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படுகிறது. தமிழகத்தில் டெங்குவால் 3பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளை பாதிக்கும் அறிய வகை நோய் குறித்து ஆய்வு செய்ய எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலர் குறிப்பிட்டுள்ள சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்துள்ளது. குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்களில் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால் நாளை தடுப்பூசி மையங்கள் செயல்படாது. சுகாதார பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில இடங்களில் விடுமுறை வழங்கவில்லை என புகார் வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories