தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் கைது: போக்சோ சட்டத்தின் கீழ் தொடரும் தமிழக அரசின் அதிரடி!

10ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் கைது: போக்சோ சட்டத்தின் கீழ் தொடரும் தமிழக அரசின் அதிரடி!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (21). இவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவதுடன் அதன் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அரவிந்தன் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் கைது: போக்சோ சட்டத்தின் கீழ் தொடரும் தமிழக அரசின் அதிரடி!
Jana Ni

இது குறித்து மாணவியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் (பொ) லில்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் மாணவி ஆன்லைன் வகுப்பு கற்க வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாசப் படங்களை எடுத்து காண்பித்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொ) லில்லி அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

banner

Related Stories

Related Stories