தமிழ்நாடு

“வேலையை விட்டுத் தூக்குனதால வெட்டிக் கொன்னோம்” : லாரி செட் உரிமையாளரை கொலை செய்த லோடுமேன்கள்!

விருதுநகரில் லாரி செட் உரிமையாளர், முன்னாள் ஊழியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வேலையை விட்டுத் தூக்குனதால வெட்டிக் கொன்னோம்” : லாரி செட் உரிமையாளரை கொலை செய்த லோடுமேன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விருதுநகரில் லாரி செட் உரிமையாளர், முன்னாள் ஊழியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (59). இவர் விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் லாரி செட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பால்பாண்டியை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டுத் தப்பினர்.

இதில் சம்பவ இடத்திலேயே பால்பாண்டி உயிரிழந்தார். கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், பால்பாண்டியிடம் முன்பு வேலை செய்த லோடு மேன்கள் மணிகண்டன், சூசை இமானுவேல் இருவரிடமும் போலிஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

1 வருடத்திற்கு முன்னதாக தங்களை வேலையை விட்டு நீக்கியதால் வேலை இல்லாமல் இருந்து வந்த விரக்தியில் இருவரும் பால்பாண்டியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் குடித்துவிட்டு பால்பாண்டி லாரி செட்டை பூட்டிவிட்டு வரும் நேரத்தை அறிந்து காத்திருந்தனர். இருசக்கர வாகனத்தில் வரும்போது வழிமறித்து இருவரும் அரிவாளால் பால்பாண்டியை சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories