இந்தியா

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகன்; இருவர் பலி - உ.பியில் கொடூரம்! (வீடியோ)

ஒன்றிய இணை அமைச்சரின் மகன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகன்; இருவர் பலி - உ.பியில் கொடூரம்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளை கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் இருவர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

லக்கிம்பூர் கேரியில் உள்ள டிகுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க வந்த உத்தர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, லக்கிம்பூர் கேரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ் சிறிதும் மனிதாபிமானமில்லாமல் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியுள்ளார். இதனால் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து கடுமையான கோபத்துக்கு ஆளான விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் 3 கார்களை எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிகுனியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக பாஜக ஆளும் ஹரியானாவில் நெல் கொள்முதலை தாமதமாக்குவதை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது தாக்குதலை கையாண்டதை கண்டித்து உத்தர பிரதேசத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உத்தர பிரதேச அரசியல் தலைவர்கள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், இந்த படுகொலைகளை பார்த்தப் பிறகும் ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என யோகி அரசை கடுமையாக தாக்கி ராகுல் காந்தி எம்பி பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories