தமிழ்நாடு

தலை, கழுத்து என சரமாரியாக வெட்டு; நண்பனால் துடிதுடித்து இறந்த நபர்; திருவள்ளூர் அருகே பகீர்!

நண்பனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலை, கழுத்து என சரமாரியாக வெட்டு; நண்பனால் துடிதுடித்து இறந்த நபர்; திருவள்ளூர் அருகே பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(31). இவர் காக்களுர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இரவு முருகன் வீட்டில் இருந்த போது இவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் அப்பு என்ற சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர் முருகனை தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருக்கும்போது சுபாஷ்சந்திர போஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த முருகன் தப்பியோடிய போது அவரை ஓட ஓட விரட்டிச் சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தலை, கழுத்து என சரமாரியாக வெட்டு; நண்பனால் துடிதுடித்து இறந்த நபர்; திருவள்ளூர் அருகே பகீர்!

இதனையடுத்து அப்பு என்ற சுபாஷ் சந்திரபோஸ் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து தாலுகா காவல் ஆய்வாளர் நாகலிங்கம் தலைமையிலான போலிஸார் இறந்துபோன முருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் முருகனுக்கும், அப்பு என்ற சுபாஷ் சந்திரபோசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் முன்விரோதம் காரணமாக முருகனை வெட்டி படுகொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடன் பணிபுரியும் நண்பனையே ஓட ஓட விரட்டி சென்று படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories