தமிழ்நாடு

PSBB-ல் சீட்; ரூ.5 லட்சத்தை வாங்கி மோசடி; மதுவந்தி மீது போலிஸில் புகார்!

பத்மா சேஷாத்திரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தாக கூறி ஒய் ஜி மகேந்திரன் மகள் மீது காவல் நிலையத்தில் புகார்.

PSBB-ல் சீட்; ரூ.5 லட்சத்தை வாங்கி மோசடி; மதுவந்தி மீது போலிஸில் புகார்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய மகனுக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக இடம் கேட்டு, அந்தப் பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியை அணுகியிருக்கிறார்.

அதற்காக 5 லட்ச ரூபாய் பணத்தை மதுவந்தியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனுக்கு பள்ளியில் இடம் கொடுப்பதாக கூறி அலை கழித்ததாகவும் இறுதியில் பணத்தை கொடுக்காமலும், பணத்தை கேட்டதற்கு, உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என மதுவதந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக கே.கே.நகர் போலிஸார் அவரது புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories