தமிழ்நாடு

"10 ஆண்டாக நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி!

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

"10 ஆண்டாக நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்": அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் அதிமுக அரசு 10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும். மேலும் புதிய பேருந்துகளை வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories