தமிழ்நாடு

“அம்மா, மகள் மற்றும் மகன் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் - என்ன காரணம்?

நிலக்கோட்டை அருகே அம்மா, மகள் மற்றும் மகன் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அம்மா, மகள் மற்றும் மகன் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் இவர் காய்கறி வியாபாரி செய்து வருகிறார். இவர் இன்று காலையில் கணவர் சந்திரபோஸ் காய்கறி வியாபாரத்திற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இவருடைய மனைவி முருகேஸ்வரி வயது 36 மகன் சந்தோஷ் வயது 15 மகள் சௌந்தர்யா வயது 13 ஆகிய மூவரும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத இருந்ததால் அக்கம் பக்கத்தினர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த நிலக்கோட்டை காவல் துறையினர் மூவரையும் விட்டு நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories