தமிழ்நாடு

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஊத்தங்கரை போலிஸ்” : குவியும் பாராட்டு !

மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வரும் ஊத்தங்கரை போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஊத்தங்கரை போலிஸ்” : குவியும் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உறவுகள் கைவிட்டதால் சாலையோரம், பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை போலிஸார்.

ஊத்தங்கரை காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான காவலர்கள் ஆதரவற்று இருக்கும் மன நிலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேரை மீட்ட போலிஸார் அவர்களை முடித்திருத்தம் செய்து, குளிக்கவைத்து, புது ஆடைகளை அணியவைத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்களை விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

ஊத்தங்கரை போலிஸாரின் இந்த செயலைப் பொதுமக்கள் விழுந்து பாராட்டி வருகிறார்கள். உறவுகள் கைவிட்டபோதும் போலிஸார் நல்ல உள்ளத்துடன் அவர்களுக்கான மறு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories