தமிழ்நாடு

“யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன்.. IPL தொடரின் அடுத்த யார்க்கர் நாயகன் யார்?” : நடராஜன் சொல்வது என்ன?

5 மாதங்களுக்கு பிறகு போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி. யார்க்கர் பந்து வீசுவதிலேயே முயற்சி செய்வேன் என ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

“யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன்.. IPL தொடரின் அடுத்த யார்க்கர் நாயகன் யார்?” : நடராஜன் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் விளையாட 8 தமிழக வீரர்கள் தேர்வாகினர். கடந்த சீசனில் விளையாடிய 9 தமிழக வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஐ.பி.எல் தொடரின் 2வது சீசன் நாளை தொடங்குகின்ற நிலையில், வீரர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 2வது சீசன் நாளை முதல் தொடங்கி இருக்கின்றன நிலையில், தமிழக வீரர்கள் யார் யார் விளையாடுகின்றனர் என்பதை பார்க்கலாம்.

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 மாத இடைவெளிக்குப் பிறகு தான் களத்தில் மீண்டும் விளையாட போவது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார். முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 5 மாதங்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ள நடராஜன், மீண்டும் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், அணியின் வெற்றிக்கு உதவுவதோடு, யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

“யார்க்கர் பந்துவீசவே முயற்சிப்பேன்.. IPL தொடரின் அடுத்த யார்க்கர் நாயகன் யார்?” : நடராஜன் சொல்வது என்ன?

அதேபோல், புது யார்க்கர் நாயகனாக உருவாகி வரும் இளம் வீரர் ஜி.பெரியசாமி, ஹைதராபாத் அணியின் புது நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அடுத்த யார்க்கர் நடராஜனாக உருவெடுத்து வரும் பெரியசாமியை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஹைதராபாத் அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அடுத்த ஐ.பி.எல் தொடரில் மற்றொரு யார்க்கர் நாயகனை தொடரில் காணலாம் என்கின்றனர் ஐ.பி.எல் வட்டாரங்கள்.

21வயதான மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கைவிரல் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால், விளையாட முடியாமல் போனது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மற்றொரு தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த்தும் தொடரிலிருந்து விலகியுள்ளார். டெல்லி அணிக்கு விளையாடி வரும் சித்தார்த், துபாயில் பயிற்சி பெற்று வரும் போது, காயம் ஏற்பட்டதால், ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் கூறியுள்ளது.

மற்ற தமிழக வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜெகதீசன், முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோர் தக்கவைக்கப்பட்ட நிலையில், ஷாருக்கான், ஹரி நிஷாந்த், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபர்ஜித் ஆகியோர் நடப்பு சீசனுக்கு தேர்வாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories