விளையாட்டு

பெரிதும் சோபிக்காத போதும் மேக்ஸ்வெல் கோடிக்கணக்கில் விலைபோக வாய்ப்பு.. 14வது ஐ.பி.எல் ஏலம் ஒரு பார்வை!

ஐபிஎல் போட்டியின் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 

பெரிதும் சோபிக்காத போதும்  மேக்ஸ்வெல் கோடிக்கணக்கில் விலைபோக வாய்ப்பு.. 14வது ஐ.பி.எல் ஏலம் ஒரு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் 14-வது சீசனுக்கான மினி ஏலம் இன்று சென்னையில் மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களிடம் மீதமிருக்கும் தொகையை பொறுத்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போட்டிபோட போகின்றனர். இந்நிலையில் முக்கியமான சில வீரர்களை மட்டும் எந்தெந்த அணிகள் ஏலத்தில் எடுக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து ஒரு சிறு அலசல்...

கிளென் மேக்ஸ்வெல்

2014 - ஒரு சீசனில் மட்டுமே ருத்ரதாண்டவம் காட்டினார் மேக்ஸ்வெல். அதன்பிறகு, ஐ.பி.எல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படி எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. கடந்த சீசனிலும் ரொம்பவே மோசமாகத்தான் ஆடியிருந்தார். சீசன் முழுவதிலும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதனால், பஞ்சாப் அணி இவரை விடுவித்துவிட்டது. என்னதான் பல அணிகளும் இவரை முயன்று பார்த்து தோற்றிருந்தாலும் இந்த முறையும் ஏலத்தில் மேக்ஸ்வெல் மோஸ்ட் வான்டட் வீரராக இருப்பார்.

கடந்த ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியிருக்கிறார். பிக்பேஷ் லீகிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆஃப் ஸ்பின்னும் வீசுகிறார். பிக்பேஷ் லீகில் பல போட்டிகளில் மேக்ஸ்வெல்தான் முதல் ஓவரை வீசியிருக்கிறார் என்பதால், ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக மேக்ஸ்வெல்லுக்கு இன்னும் மவுசு இருக்கவே செய்கிறது. சென்னை அணி மிடில் ஆர்டரில் ஒரு பவர் ஹிட்டர் இல்லாமல் தடுமாறுவதாலும் அணியில் ஆஃப் ஸ்பின்னர் இல்லை என்பதாலும் மேக்ஸ்வெல்லுக்கு முயன்று பார்ப்பார்கள்.

பெரிதும் சோபிக்காத போதும்  மேக்ஸ்வெல் கோடிக்கணக்கில் விலைபோக வாய்ப்பு.. 14வது ஐ.பி.எல் ஏலம் ஒரு பார்வை!

அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸும் கோலி, ஏபிடியை தாண்டி ஒரு வலுவான வீரர் வேண்டும் என்பதால் மேக்ஸ்வெல்லுக்கு குறிவைக்கலாம். ராஜஸ்தான் எப்போதும் 4 ஃபாரின் வீரர்கள் ஸ்லாட்டில் தெளிவாக இருக்கும். ஆனால், இந்த முறை ஸ்மித்தை வெளியேற்றியிருப்பதால் அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல்லை கூட எடுக்க பார்க்கலாம். ராஜஸ்தானுக்கும் ஒரு ஆஃப் ஸ்பின் ஆப்சன் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவர்களை விட, மேக்ஸ்வெல்லின் தற்போதைய ஃபார்மை பார்த்துவிட்டு பஞ்சாப் அணியே கூட மீண்டும் மேக்ஸ்வெல்லுக்கு முயற்சிக்கலாம் என்பதால் மேக்ஸ்வெல் இந்த முறையும் அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரராக இருப்பார்.

டேவிட் மாலன்

கடந்த முறை ரெய்னா வெளியேறிய போதே ரீப்ளேஸ்மெண்டாக டேவிட் மலானை சென்னை அணுகியதாக செய்திகள் வந்தது. ஆனால், அவர் ஆடவில்லை. நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேனாக இருப்பதால் இவருக்கும் டிமாண்ட் இருக்கும். டாப் ஆர்டரில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் என்பதாலும் ரெய்னா வந்துவிட்டதாலும் சென்னை இவருக்கு முயன்று பார்க்கும் வாய்ப்புகள் மிக்குறைவு. அதிகப்படியான பணம் வைத்திருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளே இவருக்கு அதிக போட்டி போடுவார்கள். இந்த மூன்று அணிகளில் ஏதோவொரு அணியில்தான் இவர் இருப்பார் என்பதை ஏறக்குறைய யூகித்துவிட முடிகிறது.

ஸ்டீவ் ஸ்மித்

ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரிலீஸ் செய்தது எதிர்பாராதது. கடந்த சீசனில் அவரின் மோசமான கேப்டன்சியே இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித்தை ஒரு கேப்டன் + பேட்ஸ்மேனாக வாங்குவதற்கு வேண்டுமானால் சில அணிகள் முன் வந்திருக்கும். ஆனால், இந்த முறை எல்லா அணிக்கும் கேப்டன்கள் செட்டில் ஆக இருக்கிறார்கள் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் விலைபோவதே கொஞ்சம் கடினம்தான். அடிப்படை விலைக்கே ஏதாவது அணிகள் இவரை ஏலத்தில் எடுத்து பெஞ்ச்சில் வைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

பெரிதும் சோபிக்காத போதும்  மேக்ஸ்வெல் கோடிக்கணக்கில் விலைபோக வாய்ப்பு.. 14வது ஐ.பி.எல் ஏலம் ஒரு பார்வை!

கிறிஸ் மோரிஸ்

ஒரு நல்ல பௌலிங் ஆல்ரவுண்டர் வேண்டும் என நினைக்கும் அணிகள் இவருக்கு வலைவீசும். காயத்தினால் அவதிப்பட்டிருந்தாலும் கடந்த சீசனில் டீசன்ட்டாகவே செயல்பட்டிருந்தார். அப்படியிருந்தும் பெங்களூர் அணி இவரை ரிலீஸ் செய்திருக்கிறது. மீண்டும் பெங்களூரு அணியே இவரை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எல்லா ஏரியாவிலும் ஆள் தேவைப்படும் நிலையில் இருக்கு பஞ்சாப் அணி நிச்சயம் இவரை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஷகிப்-அல்-ஹசன்

கடந்த சீசனில் ஷகிப் ஆடவில்லை என்றாலும் ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ஆப்சனாக இருப்பதால் இவருக்கும் நல்ல மதிப்பு இருக்கும். சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால் அவர்கள் ஷகிப்புக்கு முயற்சிக்கலாம். ஆனால், சன்ரைசர்ஸில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் ஸ்லாட்டில் பிரச்சனை இருப்பதால் வில்லியம்சன் கூட பெஞ்ச்சில் உட்காரும் நிலை இருக்கிறது. இது சன்ரைசர்ஸ் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகள் இவரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஷிவம் துபே

இளம் ஆல்ரவுண்டரான துபேவுக்கு கடந்த சீசனில் தகுந்த வாய்ப்புகளை கொடுக்காமலேயே பெங்களூரு அணி வெளியேற்றியிருக்கிறது. இடதுகை பேட்ஸ்மேனாகவும் மிதவேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் கைக்கு அடக்கமான விலையில் இவரை சில அணிகள் வாங்க முயற்சிக்கலாம். ராஜஸ்தானும் பஞ்சாபுமே முக்கியமாக ஷிவம் துபேவுக்கு முயற்சிக்கும்.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் காலத்தில் கிரிக்கெட் ஆடியவர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இன்னும் பாஜி மட்டும் ஆடிக்கொண்டே இருக்கிறார். சொந்த காரணங்களுக்காக கடந்த சீசனில் ஆடவில்லை. வயதாகிவிட்டது, ஃபார்ம் இல்லை என ஹர்பஜனை ஒதுக்குவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த சீசனில் ஹர்பஜன் விலைபோய் விடுவார் என்றே தெரிகிறது. எல்லா அணியிலுமே ஆஃப் ஸ்பின்னர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ஏலப்பட்டியலிலுமே நிறைய ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லை என்பதால் பல அணிகளும் ஹர்பஜனுக்கு வலைவிரிக்கும். மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு என பல அணிகளும் அவருக்கு முயற்சிக்கலாம். முஜிபூர் ரஹ்மானும் ஒரு நல்ல ஆஃப் ஸ்பின் ஆப்சனாக இருப்பார். அவருக்கும் நல்ல டிமாண்ட் இருக்கும்.

பெரிதும் சோபிக்காத போதும்  மேக்ஸ்வெல் கோடிக்கணக்கில் விலைபோக வாய்ப்பு.. 14வது ஐ.பி.எல் ஏலம் ஒரு பார்வை!

உமேஷ் யாதவ்

பெங்களூரு அணியில் ரன்களை வாரியிறைத்திருந்தாலும் ஒரு திடமான இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் உமேஷ் யாதவ்வும் இந்த முறை ஏலம் போய்விடுவார். ராஜஸ்தான் அணியில் அனுபவமிக்க இந்திய வேகங்கள் இல்லாததால் அந்த அணி இவருக்கு முயற்சிக்கலாம்.

ஷாரூக்கான், அசாரூதின், மணிமாறன் சித்தார்த்

மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆடும் திறன்படைத்த தமிழக வீரரான ஷாரூக்கான் இந்த முறை யாரும் எதிர்பாராதவிதமாக அதிக விலைக்கு ஏலத்துக்கு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இளம் வீரராக இருப்பதால் ரீடெய்ன் செய்து அடுத்தடுத்த சீசன்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் ஷாரூக்கான் நல்ல ஆப்சனாக இருப்பார்.

நடந்து சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் அதிரடியான சதமடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அசாரூதினுக்கு ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் மணிமாறன் சித்தார்த் வீசிய அந்த ஒரு மேட்ச் வின்னிங் ஸ்பெல்லுக்காகவே அவரை பல அணிகளும் வாங்க முயற்சிக்கும். விடுவித்த கொல்கத்தா அணியே கூட மீண்டும் சித்தார்த்தை வாங்கிக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது.

இன்னும் பல முக்கியமான வீரர்களும் இருக்கின்றனர் என்பதால் இந்த ஏலம் உறுதியாக சுவாரஸ்யமானதாக இருக்கும் என நம்பலாம்.

banner

Related Stories

Related Stories