தமிழ்நாடு

தையல் பழக வந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... அக்கா-மாமா இருவரும் போக்சோவில் கைது!

உத்திரமேரூர் அருகே கணவன் -மனைவி இருவரும் "போக்சோவில்" கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையல் பழக வந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... அக்கா-மாமா இருவரும் போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் உத்திரமேரூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கணவன் -மனைவி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை வாலாஜாபாத்தில் உள்ள தையல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக சேர்த்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது அக்கா பொன்னி வீட்டில் தங்கி, தையல் பயிற்சி பெற்று வந்துள்ளார் அந்தச் சிறுமி. பொன்னி - மோகன் தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ள்ளது.

இந்நிலையில், மோகன் கடந்த ஜூன் மாதம் தனது மனைவியின் தங்கையான சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். சிறுமியின் அக்கா பொன்னியும் இந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

அக்கா கணவரின் தொல்லை அதிகரிக்கவே அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சிறுமி தனது தாயாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய், சாலவாக்கம் போலிஸில் புகார் அளித்துள்ளார். போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வல்லுறவால் பதிக்கப்பட்டது உறுதியானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் மோகன் மற்றும் வல்லுறவுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பொன்னி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories