தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை.. ஒன்றிய பா.ஜ.க அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதி மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை.. ஒன்றிய பா.ஜ.க அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த 4 வருடங்களில் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த ர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த 12ம் தேதி அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் சட்டமன்றத்தில் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை.. ஒன்றிய பா.ஜ.க அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

இந்நிலையில், அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார். எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories