தமிழ்நாடு

“இத்தனை உயிர்பலிகளுக்கு பிறகும் நீட் தேர்வு வேண்டும் என்கிறது பாஜக” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பது தி.மு.கவின் கொள்கை. நீட் தேர்வு தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் கொள்கை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“இத்தனை உயிர்பலிகளுக்கு பிறகும் நீட் தேர்வு வேண்டும் என்கிறது பாஜக” : அமைச்சர்  மா.சுப்பிரமணியன் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் பல்வேறு பகுதியில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக நாளை சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து கேட்டபோது பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அ.தி.மு.கவின் சாயம் வெளுத்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பது தி.மு.கவின் கொள்கை. நீட் தேர்வு தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை.

அ.தி.மு.கவை பொறுத்தவரை இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள். இன்றைக்கு சேலத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்ற வருத்தத்தை முதலமைச்சர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நாளை ஒன்றிய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக நீட்டில் இருந்து விலக்கு பெற்று தீருவது என்ற வகையில், ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் நிறைவேற்ற இருக்கிறார்கள்.

“இத்தனை உயிர்பலிகளுக்கு பிறகும் நீட் தேர்வு வேண்டும் என்கிறது பாஜக” : அமைச்சர்  மா.சுப்பிரமணியன் காட்டம்!

நிச்சயம் அனைத்து கட்சிகளும் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கிறோம். காரணம் 2017 அ.தி.மு.க அரசு நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒன்றுபட்டு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அ.தி.மு.க அரசு தொடர்ந்து அந்த தீர்மானத்திற்கு அழுத்தம் தராமல் குடியரசுத் தலைவரிடம் எந்த அழுத்தத்தையும் செய்யாத நிலையில் அது திரும்பி வந்துவிட்டது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். ஆனால், தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் முதல் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்து குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தரப்படும் என சொல்லப்பட்டது.

அந்த வகையில். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில், ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் அறிக்கை பெற்று அந்த அறிக்கை சட்ட வல்லுநர்கள் மூலம் அதற்கான முழு வடிவத்தைப் பெற்று, தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டத்தில் சிறந்த தீர்மானம் நிறைவேற்றிட அதற்கான கருத்துக்களை ஏற்படுத்தினார்.

2006ல் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் வராமல் இருந்ததற்கு கலைஞர் அவர்கள் செய்த காரியமே காரணம். அதே வழியில் முதலமைச்சர் அவர்கள் நீதியரசர் தலைமையிலான குழு அறிக்கையை வைத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை மூலம் சட்டமன்றத்தில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை கூட்டத்தொடர் நிறைவு பெறும் நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்தடுத்து வரும் காலத்தில் மாணவர்களுக்கு நீட் தொல்லை இருக்காது என கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories