தமிழ்நாடு

ஜெ. கொலை வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த தி.மு.க எம்.எல்.ஏ.. பேரவையில் வெலவெலத்துப்போன எடப்பாடி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விரைவாக முடித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெ. கொலை வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த தி.மு.க எம்.எல்.ஏ.. பேரவையில் வெலவெலத்துப்போன எடப்பாடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் வழக்கை விரைவாக முடித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் கோரிக்கை வைத்துள்ளார்.

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் இன்னும் முடிவு பெறவில்லை.

வாக்கு சேகரித்த சென்றபோது இதுகுறித்து குறிப்பாக பெண்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து இருக்கின்ற மர்மங்களை கண்டறிந்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்கள். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவாக நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், கொரானா காலத்தில் களப்பணியில் இருந்த காவலர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்து, மக்களைக் காப்பாற்றிய காவல்துறை மீது மக்களுக்கு மிகுந்த ஏற்பட்டது. காவல்துறையினரின் பணி சிறப்பாக இருந்தாலும் கூட காவல்துறைக்கு கரும்புள்ளி ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சாத்தான்குளம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற விவகாரங்களில் காவல்துறை மீதான களங்கம் போகவில்லை.

மாவட்ட சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு சில கைதிகளை பொது போக்குவரத்தில் அழைத்துச் செல்கின்றனர். அரசு காவல்துறை வாகனம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories