அரசியல்

”உழைப்பை திருடி திண்பதுதான் ஆர்.எஸ்.எஸின் எண்ணம்” - திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு!

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஆன்மீக தளத்தில் ஆளுமை செய்ய பெருந்தெய்வ வழிபாட்டை இணைத்து கொண்டார்கள் என திருமாவளவன் எம்.பி. சாடியுள்ளார்.

”உழைப்பை திருடி திண்பதுதான் ஆர்.எஸ்.எஸின் எண்ணம்” - திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிடர் கழகத் தலைவரும் ஆசிரியருமான கி.வீரமணி எழுதிய ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று (செப்.,08) நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் மேடையில் பேசியதன் விவரம் பின்வருமாறு:

”கொரானா காலத்தில் ஓய்வாக இருக்கவேண்டும் என்று சோர்ந்து விழுந்து விடாமல் காலத்திற்கான தேவையைக் கருதி இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி. பா.ஜ.கவை பற்றி எழுதாமல் ஏன் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுத வேண்டும், அரசியல் கட்சி பற்றி எழுத வேண்டிய தேவை என்ன? 40 ஆண்டுகளுக்கு பிறகும் ஆர்.எஸ்.எஸ் பற்றி தோலுரித்து காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஆன்மீக தளத்தில் ஆளுமை செய்ய பெருந்தெய்வ வழிபாட்டை இணைத்து கொண்டார்கள். இதுதான் இந்து ராஷ்டிரம். உடல் உழைப்பு இல்லாமல் வாழ்வது தான் ஆர்.எஸ்.எஸ். கல்வி தேவை என்றால் இட ஒதுக்கீடு தேவை. ஆகவே கல்லியறிவை தடுத்து நிறுத்துவதுதான் அவர்கள் எடுத்த நடவடிக்கை.

நாடாளுமன்றத்தில் என்ன சட்டங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை பாஜக தலைவர்கள் முடிவெடுப்பதை விட ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள்தான் முடிவெடுக்கிறார்கள். குடியுரிமை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என பாஜக விரும்பியது என்பதை விட ஆர்.எஸ்.எஸ்தான் விரும்பியது, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் திண்ணமாக உள்ளது.

ஆட்டிப் படைக்கும் சமூகமாக இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைவு. ஆனால் கருத்தியல் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தற்காலத்து இந்துத்வ எனும் வளர்ச்சி. இந்த கொள்கைகளுக்கெல்லாம் அடிப்படையானதுதான் சனாதனம். வர்ணம் சார்ந்த நான்கு பாகுபாட்டை மாற்ற முடியாது என்பதே சனாதன கொள்கை. " என பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories