தமிழ்நாடு

“மொபைல் போனால் வழிமாறிய கணவன்.. வருத்தத்தில் மனைவி, மகள் எடுத்த விபரீத முடிவு” : சென்னையில் நடந்த சோகம் !

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மொபைல் போனால் வழிமாறிய கணவன்.. வருத்தத்தில் மனைவி, மகள் எடுத்த விபரீத முடிவு” : சென்னையில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மக்கள் இருந்தார். அசோக் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அசோக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ராஜலட்சுமி கணவனைக் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மன வருத்தத்திலிருந்த ராஜலட்சுமியும் அவரது மகளும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அசோக் ராஜபாண்டியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories