
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல செயல்முறைகளை, தாம்தான் கொண்டுவந்ததுபோல் மீண்டும், மீண்டும் பொய் தகவல்களையே த.வெ.க பரப்பி வருகிறது
இதனை சுட்டிக்காட்டி உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறது தி இந்து ஆங்கில ஊடகம். இது குறித்து தி இந்து ஊடகம் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டது பின்வருமாறு,
த.வெ.க ஆட்சியில்தான் முதன்முறையாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறாரா?
இல்லவே, இல்லை!
இதற்கு முன் காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கக்கன் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெயலலிதா அரசில் தனபால் உணவுத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
த.வெ.க எம்.எல்.ஏ.க்களில் பலர் உண்மையான கல்வித்தகுதியை மறைத்து சமூகவலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதையும் தி இந்து ஆங்கில நாளேடு சாடியுள்ளது.

இதேபோல், த.வெ.க.வில் பொதுத்தொகுதிகளில் போட்டியிட்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 28 பேர் எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருப்பதாக பரப்பப்பட்டு செய்தியும் பொய்தான்.
விஜய் தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து தலைமைச் செயலகத்திலேயே அமர்ந்து உண்பது போல சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படம் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பொய் புகைப்படம் என்றும் தி இந்து ஆங்கில நாளேடு சாடியுள்ளது.
முதலமைச்சர் நாற்காலியில் வெள்ளைத் துண்டு என்ற நடைமுறையை விஜய்தான் நீக்கியுள்ளார் என்பது கடைந்தெடுத்த பொய் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதும் முதலமைச்சர் நாற்காலியில் வெள்ளைத் துண்டு பயன்படுத்தப்படவில்லை.






