தமிழ்நாடு

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன் : 2 பேரை கைது செய்த போலிஸ்!

கல்லூரி மாணவியின் அந்தரங்க படத்தை வெளியிட்ட இருவரை போலிஸார் கைது செய்தனர்.

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன் : 2 பேரை கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சதீஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களை சதீஷுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

பின்னர் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி வேறு ஒருவரைக் காதலித்துள்ளார். இதனை அறிந்த சதீஷ், அவரது அந்தரங்க புகைப்படத்தை அவரது காதலருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

மேலும் மாணவியின் புகைப்படத்தைக் காதலர்கள் இருவரும் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். பிறகு மாணவியின் அந்தரங்கப் படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதைப் பார்த்து மாணவியும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவி நிலக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சதீஷ், நெல்சன், அருண், விஷ்வா ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் சதீஷ், நெல்சன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள அருண் , விஸ்வா ஆகியோரை போலிஸார் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படம் வெளியான விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories