தமிழ்நாடு

சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட வனவிலங்கு ஆர்வலர் மீது தாக்குதல் : அதிர்ச்சி சம்பவம் !

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு பகுதியில் வனவிலங்கு ஆர்வலர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியிடம் அத்துமீறிய  இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட வனவிலங்கு ஆர்வலர் மீது தாக்குதல் : அதிர்ச்சி சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தில், ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்த தனியார் தொண்டு நிறுவன உறுப்பினரும், வனவிலங்கு சரணாலய பாதுகாவலர்களுமான டி.வி.கிரிஷ் என்பவர், தனது உறவினரும் அவர்களுடைய மகள்களும் ஒரு ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.

சந்தவேரி கிராமம் வழியாக வந்த பொழுது, கிராமத்தில் சாலையோரம் அமர்ந்து இருந்த இளைஞர்கள் ஜீப்பில் இருந்த பெண்களை பார்த்த கிண்டல் செய்துள்ளனர். இதையடுத்து ஜீப்பில் இருந்த கிரீஸ் ஜீப்பை நிறுத்திவிட்டு அந்த இளைஞர்களை இதுபோன்று செய்வது தவறாகும் என கூறி கண்டித்துள்ளார். கண்டித்த உடன் கிரீஷ் ஜீப்பை எடுத்துக்கொண்டு சிக்கமகளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இதனால் கிரிஷ் மீது ஆத்திரம் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மேலும் சில இளைஞர்களை கூட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து, சிக்கமகளூர் ஹோசபெட்டை என்ற இடத்தில் காரை வழிமறித்துள்ளனர்.

அப்போது வனப்பாதுகாவலர் கிரீஷ் மற்றும் காரிலிருந்த கிரீஷ் உறவினர்களை தாக்கியுள்ளனர். இதனையடுத்து கிரீஷ் சிக்கமகளூர் புறநகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வனவிலங்கு ஆர்வலர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories