தமிழ்நாடு

“மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே பொது வெளியில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை” : அமைச்சர் பேட்டி!

மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே தமிழ்நாடு அரசு பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படவில்லை என இந்து சமயம் மற்றும் அறநுலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே பொது வெளியில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கவில்லை” : அமைச்சர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 143 பேருக்கு 31 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திர இரு சக்கர வாகனம் உள்பட அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜய ராணி வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “நலத்திட்ட உதவியானது சாலை விபத்தில் மரணமடைந்தோர், சாலை விபத்தில் காயம் அடைந்தோர், தையல் பயிற்சி முடித்தோர், விதவை உதவி தொகை ஆகிவையை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட சார்பில் 3 வது முறையாக நலத்திட்டம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மனு கொடுத்து காத்திருந்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள் தகுதி உள்ளவர்களுக்கு தாமதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்து அறநிலைத்துறை சார்ந்த இடங்களை சமுக விரோதிகள், ஆக்கிரப்பாளர்கள் பயன்படுத்த முடியாது சூழல் உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில்

முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக பொது இடங்களில் வினாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலை வைக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்த கருத்திற்கு மிரட்டல் உருட்டளுக்கு பயப்படும் ஆட்சி இல்லை. மனித உயிர்கள் முக்கியமானது என கருதியே ஆட்சி நடைப்பெற்று வருகிறது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories