தமிழ்நாடு

குளிர்பானத்தில் மது ஊற்றிக்கொடுத்து பெற்ற மகளையே வல்லுறவு செய்த தந்தை.. உடந்தையாக இருந்த சித்தியும் கைது!

பெற்ற மகளுக்கு 1 வருடமாக குளிர்பானத்தில் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் உறவு கொண்ட தந்தை, உடந்தையாக இருந்த சித்தி ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

குளிர்பானத்தில் மது ஊற்றிக்கொடுத்து பெற்ற மகளையே வல்லுறவு செய்த தந்தை.. உடந்தையாக இருந்த சித்தியும் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெற்ற மகளுக்கு 1 வருடமாக குளிர்பானத்தில் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் உறவு கொண்ட தந்தை, உடந்தையாக இருந்த சித்தி ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நள்ளிரவில் தனியாக நின்றுகொண்டிருந்த 14 வயது சிறுமியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் மீட்டு மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பின்னர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள கருணாலயா காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காப்பகத்தில் சிறுமி சாப்பிடாமல் சோகமாக இருப்பதைப் பார்த்த காப்பக ஊழியர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கரும்பாக்கம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்த 6 மாதங்களில் முதல் மனைவி இறந்துவிட்டதால் குமார் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக தந்தை தனக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பல முறை பாலியல் உறவு கொண்டு துன்புறுத்தியதாகவும் அவரது சித்தி கஸ்தூாி இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் அச்சிறுமி கூறியுள்ளார்.

இதனால் செங்கல்பட்டில் இருந்து தப்பித்து மெரினா கடற்கரைக்கு வந்தாக கருணாலயா காப்பக அலுவலா் குணாவிடம் தெரிவித்துள்ளார் அச்சிறுமி.

இதனையடுத்து காப்பக ஊழியர் வடசென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் லலிதாவிடம் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டிற்கு சென்று சிறுமியின் தந்தை குமார் மற்றும் சிறுமியின் சித்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories