அரசியல்

“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

“நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!”

“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டம் அஞ்சுகம் அம்மையார் அரங்கத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவருமான உ.மதிவாணன் இல்லத் திருமண விழா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, விழா மேடையில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களையும், உ.மதிவாணன் அவர்களையும் வாழ்த்திவிட்டு அரசியல் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அவர் தெரிவித்ததாவது,

“ஒரு பக்கம் மின்வெட்டுப் பிரச்சனை. இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என தமிழ்நாடு முழுவதும் இப்போது ஏராளமான பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது.

இவ்வேளையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்... “அப்பா எங்கே” என்று முதலமைச்சர் கேட்கிறார்.

“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

அப்பாவ அங்க தேடாதிங்க! மக்கள் மனதில் பதிந்திருக்கிறார் அதுபோதும். நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!

சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றைக்கும் நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளாக, மக்களுக்காக செயலாற்றி வருகிறேன். நான் முதலமைச்சராக இருந்து பணியாற்றியதுபோல், வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில் இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.

“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கோப்பில், இட்ட கையெழுத்தில் மு.க.ஸ்டாலின் இருப்பான்.

வேறு எங்கேயும் என்னைத் தேட வேண்டிய அவசியமில்லை. நான் கோட்டையில்தான் இருக்கிறேன்.

மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும்வரை, இந்த மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்.

தலைவர் கலைஞர் இருந்தவரை, அவராக எந்தக் கூட்டணியையும் விட்டதில்லை. அதுபோலதான் நானும், நானாக கூட்டணியை முறித்துக்கொள்ள மாட்டேன். ஆனால், அவர்களாக சென்றால் ஒன்றும் செய்ய முடியாது.

எனினும், தற்போதைய சூழலில் பலரும் தி.மு.க.விற்கு கூட்டணியே வேண்டாம் என்கிறார்கள். அதை நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்! பரிசீலிப்போம்! பரிசீலிப்போம்!”

banner

Related Stories

Related Stories