தமிழ்நாடு

கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி.. தேனியில் பகீர் சம்பவம்!

பிரேத பரிசோதனைக்கு பின்பு கழுத்தை நெரித்துக் கொலை செய்தது உறுதியானதை தொடர்ந்து மனைவி மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைப்பு.

கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி.. தேனியில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் சிங் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்திய என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. ரஞ்சித்குமார் சொந்தமாக ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு கணவர் மது போதையில் தூங்கிய போது மனைவி சத்தியா கணவரை கயிர் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு காலையில் தன் கணவர் மாரடைப்பு வந்து உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடி உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி.. தேனியில் பகீர் சம்பவம்!
DELL

இதனை தொடர்ந்து இறந்த ரஞ்சித்குமார் சிங்கின் தந்தை ராஜீவ் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இறந்தவரின் உடலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அரசு அனுப்பிய நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் இறந்தவர் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரியவந்த்து.

அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் சத்தியாவை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி சத்யா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி நிதிபதி நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தென்கரை காவல்துறையினர் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

banner

Related Stories

Related Stories