இந்தியா

முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக அறை.. அதிர்ச்சியில் மாணவர்கள் : ஆந்திராவில் பகீர் சம்பவம்!

ஆந்திராவில் பல்கலைக்கழக அறையை முதல் இரவுக்காக வாடகைக்கு விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக அறை.. அதிர்ச்சியில் மாணவர்கள் : ஆந்திராவில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று உள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் ஆகஸ்ட் 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு புதுமண தம்பதியினருக்கு முதல் இரவு நடத்துவதற்காக அறை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பின்னர், அடுத்தாள் இந்த அறைக்குச் சென்ற அதிகாரிகள் அறைமுழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி தம்பதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இரண்டு அறைகள் வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து பல்கலைக்கழக ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories