தமிழ்நாடு

வரவேற்பு பணி என அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்... நடுரோட்டில் வெளுத்த இளம்பெண்!

கல்லூரி மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதைக்காட்டி மிரட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பு பணி என அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்... நடுரோட்டில் வெளுத்த இளம்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. திருமணங்கள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு வரவேற்புப் பணியில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை அழைத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், ராஜா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள் சிலரை குறிவைத்து, ஆசை வார்த்தைகளைக் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் தன்னிடம் பணியாற்றும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி பல வி.ஐ.பிக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும், காவல்நிலையத்தில் புகார் அளித்தால் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் பாலியல் தொழிலுக்கு ராஜா பெண்களை அழைக்கும் ஃபோன் கால் ஆடியோவும், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ராஜாவை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories