தமிழ்நாடு

'பட்டிமன்ற மேடைகளில் மீண்டும் அந்த கம்பீரக் குரல் எப்போது ஒலிக்கும்?'-பாரதி பாஸ்கர் உடல்நிலை புதிய தகவல்!

மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

'பட்டிமன்ற மேடைகளில் மீண்டும் அந்த கம்பீரக் குரல் எப்போது ஒலிக்கும்?'-பாரதி பாஸ்கர் உடல்நிலை புதிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தனது பட்டிமன்ற பேச்சின் மூலம் உலகத் தமிழர்களிடையே பெரும் பாராட்டை பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்.பி.ஏ படித்திருக்கும் பாரதி பாஸ்கர் வங்கியில் பணியாற்றிய போது, சாலமன் பாப்பையாவுடன் இணைந்து தனது பட்டிமன்ற பேச்சை தொடர்ந்து வந்தார்.

சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள், பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த 9ம் தேதி காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

'பட்டிமன்ற மேடைகளில் மீண்டும் அந்த கம்பீரக் குரல் எப்போது ஒலிக்கும்?'-பாரதி பாஸ்கர் உடல்நிலை புதிய தகவல்!

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து பிரபலங்கள், தமிழ் உணர்வாளர்கள், ரசிகர்கள் பலரும் அவரும் அதிர்ச்சியடைந்தனர்,

பாரதி பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி பாஸ்கரின் கம்பீரமான குரல் பட்டிமன்ற மேடைகளில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories