தமிழ்நாடு

“வனத்தின் ஒப்பற்ற நாயகனாக திகழும் யானைகள்” : நாம் ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் ? - சிறப்புக் கட்டுரை!

மற்ற விலங்குகளுக்கு உறுதுணையாக இருக்கும் வனத்தின் ஒப்பற்ற நாயகனாக திகழுகம் யானைகள் குறித்த சிறப்புக்கட்டுரை இது.

“வனத்தின் ஒப்பற்ற நாயகனாக திகழும் யானைகள்” : நாம் ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் ? - சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆகஸ்ட் 12ம் தேதி உலகம் முழுவதும் யானைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யானைகள் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் அதனால் மற்ற தாவர உண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்த்தால் என்றால் யானைகள் விதைகளை பரப்பும் காரணியாக திகழ்ந்து வருகிறது.

யானைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 200 முதல் 250 கிலோ வரை உணவு கிடைக்க வேண்டுமானால் சராசரியாக 20 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றால் தான் அதற்கு உண்டான உணவு கிடைக்கும். அவ்வாறு உணவு உட்க்கொள்ளும் அதன் செரிமானம் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு அதன் செரிமானம் தன்மை குறைவு என்பதால் 40 முதல் 50 சதவீதம் உணவு தான் செரிமானம் ஆகும்.

மீதி உணவு செரிமானம் ஆகாமல் தான் வெளியே வருகிறது. முக்கியமாக அதன் உட்க்கொள்ளும் விதைகள் செரிக்காமல் வருகிறது. இந்த விதைகள் ஒரு வனப்பகுதியில் சாப்பிட்ட விதைகள் மற்றொரு வனப்பகுதியில் வந்து விழுவதால் அங்கு தாவரங்கள் வளர ஆரம்பிக்கும். இதற்கு அடுத்த படியாக பார்த்தால் கோடை காலங்களில் வறண்டு காணப்படும் ஓடைகளில் பூமிக்கு அடியில் தான் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்.

“வனத்தின் ஒப்பற்ற நாயகனாக திகழும் யானைகள்” : நாம் ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் ? - சிறப்புக் கட்டுரை!

ஆனால், வனப்பகுதிகளில் உள்ள எந்த விலங்குகளாலும் பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், யானைகளின் தும்பிக்கையில், சுமார் 1 இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட நரம்புகள் இயங்குவதால் பூமிக்கு அடியில் போகும் தண்ணீரை அதன் தும்பிக்கை மூலம் தட்டி பார்க்கும் போது அதன் அதிர்வுகளை கொண்டு பூமிக்கு அடியில் தண்ணீர் போகிறதா என்று அதனால் கண்டுப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் தண்ணீர் மூலம் மண்களை கொண்டு அதன் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடிகிறது. மேலும் கோடை காலத்தில் மான், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க யானைகள் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

மேலும் வனப்பகுதிகளில் அனைத்து தாவர உண்ணிகளுக்கும் உப்பு மண் மிகவும் அவசியமானதாக இருந்து வருகிறது. இந்த தாவர உண்ணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கால கட்டத்தில் தாது உப்புகள் குறையும் போது வனத்தில் உள்ள உப்பு மண்களை உட்க்கொண்டு அதை சரி செய்து கொள்ளும். ஆனால் இந்த உப்பு மண் வனத்திற்க்குள் எங்கு கிடைக்கும் என்று எந்த விலங்கினாலும் கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலையில் இந்த உப்பு மண் பூமிக்கு அடியில் சுமார் 1 முதல் 2 அடி வரையில் தான் இருக்கும்.

“வனத்தின் ஒப்பற்ற நாயகனாக திகழும் யானைகள்” : நாம் ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் ? - சிறப்புக் கட்டுரை!

இந்த உப்பு மண்ணை கண்டுபிடிப்பது யானைகள் தான். எப்படி என்று பார்த்தால் தனது தும்பிக்கையில் இலட்சம் நரம்புகள் இருப்பதால் அதன் நுகர்வு திறன் அதிகம் என்பதால் உப்பு மண்ணை கண்டுபிடித்து தனக்கு தேவையான உப்பு மண்ணை உட்கொள்ளும். யானைகள் உட்கொண்ட மீதி போக இருக்கும் உப்பு மண்ணை காட்டு மாடு, மான் போன்ற அனைத்து தாவர உண்ணிகளும் இந்த உப்பு மண்ணை பயன்படுத்தி கொள்கின்றன.

இவ்வாறு யானை தனக்காக ஒரு விஷயத்தை செய்யும் போது அது வனத்தில் உள்ள அனைத்து தாவர உண்ணிகளுக்கும் பெரும் பயனை தருகிறது. மேலும் யானைகள் வழித்தடத்தில் ஆடம்பர பங்களா, காட்டேஜ் போன்றவைகளை வனப்பகுதியை அழித்து மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் இந்த யானைகள் தங்களுக்கு தேவையான உணவுகளுக்காக விளை நிலங்களுக்குள் சென்று விளைநிலங்களை சூறையாடுவதும், கிராமப்புற பகுதிகளுக்குள் புகுந்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்ப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்ப்படுகிறது.

எனவே ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் பாதுகாப்பு தினத்தன்று தாவர உண்ணிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் உறுதுணையாக இருக்கும் யானைகளை பாதுகாப்பதில் நமது பங்கை அளிப்போம், இதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் யானைகளை பாதுகாப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்.

banner

Related Stories

Related Stories